சிரம்பான், 07 மார்ச் (பெர்னாமா) -- நேற்றிரவு, நெகிரி செம்பிலான், பரோய் நோக்கிச் செல்லும் Matahari Height சமிக்ஞை விளக்கு சந்திப்பிற்கு அருகிலுள்ள ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1-ரில், இரு மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை, கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அவ்விருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு மணி 8.30-க்கு நிகழ்ந்த அச்சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், 15 மற்றும் 16 வயதான அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.
Honda Jazz ரக வாகனத்தில் 18 வயதான ஆண் ஒருவரும், மற்றொரு 17 வயது நண்பரும், செனாவாங்கிலிருந்து பரோயை நோக்கி பயணித்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
சிவப்பு சமிக்ஞையில் காரை நிறுத்தாமல், அவ்விரு மாணவர்கள் பயணித்த Modenas Kriss ரக மோட்டார் சைக்கிளையும், இடது புறத்திலிருந்து வந்த மற்றொரு Honda Vario ரக மோட்டார் சைக்கிளையும், அவர்கள் மோதி விபத்துக்குள்ளானது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாகனத்தைச் செலுத்தி வந்த அவ்விரு ஆண்கள் உட்பட Honda Vario ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக சிரம்பான், துங்கு ஜஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு 1-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)