உலகம்

ஹிஸ்புட் தஹ்ரிர் குழுவைக் களைக்க தடிகளும் கையெறி குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன

08/03/2025 05:24 PM

டாக்கா, 08 மார்ச் (பெர்னாமா) --    நேற்று, வங்காளதேசத்தின் தலைநகரில் உள்ள பைதுல் மொகர்ராம் எனும் முதன்மை பள்ளிவாசலின் அருகில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் பேரணியாக சென்ற தடைச் செய்யப்பட்ட ஹிஸ்புட் தஹ்ரிர் குழுவைக் களைக்க போலீசார் தடிகளையும் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தினர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த அந்த வன்முறை தாக்குதலில், பலர் காயமடைந்திருப்பதோடு, பேரணியில் கலந்து கொண்ட சில போராளிகள் கைது செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தில் அதனைக் களைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, டாக்கா மெட்ரோபொலிதன் போலீஸ் நிலையத்தின் துணை ஆணையர் மசூட் ஆலம் கூறினார்.

இதனால் மக்கள் பலர் காயமடைந்துள்ளதை, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

“Freedom has one path, Khilafat, Khilafat” மற்றும் “Naraye Taqbir, Allahu Akbar” போன்ற முழக்கங்களை உச்சரித்தவாறு, 3,000 முதல் 5,000 பேர் அப்பேரணியில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

“March for Khilafat” எனப்படும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள மக்களை வலியுறுத்தி அந்த இஸ்லாமியக் குழு அண்மைய காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் டாக்கா முழுவதும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதோடு சுவரொட்டிகளையும் பயன்படுத்தி வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)