அமெரிக்கா, 11 மார்ச் (பெர்னாமா) -- இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் நான்காம் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
ஆயிரமாவது ATP மாஸ்டர்ஸ் போட்டியான இதில் வெற்றிப் பெற்றதோடு, தொடர்ச்சியாக 14 வெற்றிகளைப் பதிவு செய்து டென்னிஸ் அரங்கில் அவர் தமது திறனை நிரூபித்துள்ளார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் அரங்கில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவுடன் விளையாடினார்.
அதில் நேரடி செட்களில் கார்லோஸ் அல்கராஸ் வெற்றிப் பெற்றார்.
முதல் செட்டிடை 6-2 என்ற நிலையில் வென்ற அவர், இரண்டாம் செட்டிடை டெனிஸ் ஷபோவலோவுடன் சற்று போராடி கைப்பற்றினார்.
ஒரு மணிநேரம் 24 நிமிடத்தில் அல்கராஸ் தமது வெற்றியை உறுதி செய்தார்.
மிகச் சிறந்த 16 ஆட்டக்கார்கள் சந்திக்கும் நான்காம் சுற்றில் அல்கராஸ் நாளை பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் விளையாடவுள்ளார்.
இந்தியன் வெல்ஸ் பட்டத்தை இரு முறை வென்றுள்ள அவர், தற்போது தமது ஆறாவது ATP மாஸ்டர்ஸ் கிண்ணத்தையும் வெல்லும் இலக்கில் உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)