கலிபோர்னியா, 12 மார்ச் (பெர்னாமா) - இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார் நெதர்லாந்தின் டெலன் க்ரிக்ஸ்பூர்.
நான்காம் சுற்று ஆட்டத்தில் அவர் ஜப்பானின் யொசுகெ வாதானுக்கியை நேரடி செட்களில் தோற்கடித்தார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் அரங்கில் இன்று அதிகாலை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் டெலன் க்ரிக்ஸ்பூர்வும் யொசுகெ வாதானுக்கியும் கடுமையாக போட்டியை எதிர் கொண்டனர்.
முதல் செட்டை கைப்பற்றுவதில் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனாலும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் 7-6 எனும் நிலையில் முதல் செட்டை க்ரிக்ஸ்பூர் வென்றார்.
அதே உற்சாகத்துடன் விளையாடிய க்ரிக்ஸ்பூர் இரண்டாம் செட்டை, 6-1 என மிக எளிதில் வென்றார்.
28 வயதுடைய அவர், நாளை நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் ஹொல்கெர் ரூனைச் சந்திக்கவிருக்கின்றார்.
முன்னதாக, முதல் சுற்றில், ஜெர்மனியின் முதல் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வெளியேற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்திய க்ரிக்ஸ்பூர், ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்லும் இலக்கில் உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)