பெட்டாலிங் ஜெயா, 27 மே (பெர்னாமா) -- வடக்கு மற்றும் கிள்ளான் துறைமுகங்களில் கடந்த மாதம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் செல்லுபடியாகும் ஒப்புதல் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட 20 விவசாய ஆளில்லா விமானங்களைக் கடத்தும் முயற்சியை கோலாலம்பூரைச் சேர்ந்த அரச மலேசிய சுங்கத் துறை, ஜே.கே.டி.எம் முறியடித்தது.
சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட முதல் ஆளில்லா விமானம் இதுவாகும்.
DJI Agras T50 ரக மின்னணு உபகரணங்கள் செய்யப்பட்டதுடன், அதன் மதிப்பு 15 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் என்றும், 78,000 ரிங்கிட் வரி செலுத்தப்படவில்லை என்றும், ஜே.கே.டி.எம்-மின் அமலாக்க குழுவின் உளவுத்துறை தகவல் வெளியிட்டிருந்தது.
ஆளில்லா விமானங்கள் கொண்ட 20 பெட்டிகள் அடங்கிய கொள்கலன் ஒன்று மேற்கு ஆசியாவில் உள்ள நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது சோதனையில் கண்டறியப்பட்டதாக சுங்கத்துறை அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் ரய்சாம் செதாபா கூறினார்.
முன்னதாக, இம்மாதம் 7-ஆம் தேதி அதே இடத்தில் அதே குழுவிடம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், கொள்கலன் ஒன்றில் 28 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய 21,351 லீட்டர் கொண்ட பல்வேறு வகையான மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
40 அடி அகலம் கொண்ட கொள்கலனை ஆய்வு செய்தபோது, இறக்குமதி உரிமம் இல்லாமலும் செல்லுபடியாகும் வரி முத்திரைகள் இல்லாமலும் இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையிலான மதுபானங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)