புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) - இஸ்லாமிய வங்கி முறையை உருவாக்குவது உட்பட ஹலால் பொருள்களின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதில்மலேசியாவும் கிர்கிஸ்தான் குடியரசும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
அக்குடியரசிற்குத் தொடர்புடைய வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இரு துறைகளிலும் தனது நிபுணத்துவத்தை, மலேசியா வழங்கவிருக்கின்றது.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற கிர்கிஸ்தான் குடியரசின் அதிபர் Sadyr Zhaparov-உடனான சந்திப்பின் போது, சிறந்த நிதி அமைப்பை உருவாக்க இஸ்லாமிய வங்கிகள் நிறுவுவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"நாங்கள் கலந்துரையாடினோம். நிச்சயமாக, இஸ்லாமிய வங்கி, ஹலால், கட்டுமானம், நிதி ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த பிரச்சனைகள் மற்றும் இஸ்லாமிய வங்கிகள் அமைப்பதும் உட்பட்டுள்ளது," என்றார் அவர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் ஒத்துழைப்பு, குறிப்பாக, Kyrgyzstan நாட்டின் மின்சார உற்பத்திக்கு முதன்மையாக விளங்கும், hidro சக்தி மற்றும் இரு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் குறித்தும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)