Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

புளியமரத்தில் மேடை அமைத்து இயற்கையுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்

31/08/2025 04:28 PM

தும்பாட், 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தெலுக் ரெஞ்சுனா தீவில் உள்ள கிளாந்தான் மரம் ஏறுவோர் சங்க உறுப்பினர்கள் சற்று மாறுப்பட்டு நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

புளிய மரத்தின் மேலே மேடைக் கட்டி அதில் தேசிய தினத்தை கொண்டாடிய அவர்களின் முயற்சி பலரின் கவனம் ஈர்த்தது.

சுதந்திரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, இயற்கைக்கு நெருக்கமான சுதந்திர அனுபவத்தைப் பெறும் வகையிலும் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிளாந்தான் மரம் ஏறுவோர் சங்கத் தலைவர் வான் முஹமட் வான் டாவுட் கூறினார்.

"இம்முறை சற்று மாற்றுப்பட்டு, சமய சொற்பொழிவாளர் உஸ்தாஸ் நஜிப் சாக்ஹிரியை அழைத்திருந்தோம். ஓர் இஸ்லாமியிரின் சுதந்திரம் என்ற தலைப்பில் அவர் மரத்தின் மேலே இருந்து சொற்பொழிவாற்றினார். அதன் பின்னர் மரத்தின் மேலே நாங்கள் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம்.அதன் பிறகு, மரத்தின் உச்சியிலிருந்து கலந்துரையாடலை மேற்கொண்டோம். அதில் சிறுவயது சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டோம். மரம்தான் எங்களின் விளையாட்டு மைதானம், " என்றார் அவர்.

அழகான கிளைகளை கொண்ட புளியமரம், இந்தத் தீவின் பூர்வீக அடையாளமாக இருப்பதால், இம்மரத்தை தமது தரப்பினர் தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)