Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ரவாங்கில் பருத்தி தொழிற்சாலை தீக்கிரை

30/06/2025 07:58 PM

ரவாங், 30 ஜூன் (பெர்னாமா) --   இன்று காலை, சிலாங்கூர், ரவாங், Bandar Country Homes-இல் உள்ள பருத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பான்மையான பகுதிகள் சேதமடைந்தன.

எனினும், இத்தீச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தீச்சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு காலை சுமார் 10.14 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ரவாங், பெஸ்தாரி ஜெயா, சுங்கை பூலோ உட்பட செலாயாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நான்கு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

காலை 11.25 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், தொழிற்சாலையின் 90 விழுக்காடு பகுதிகள் தீயில் சேதமடைந்ததாக, அவர் கூறினார்.

இதனிடையே, தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)