புதுடெல்லி, 02 ஜூலை (பெர்னாமா) -- புதுடெல்லியில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவிற்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 900 அடி வரை கீழே இறங்கியது தொடர்பாக விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
AI-187 விமானம் சென்ற மாதம் (ஜூன் 2025) 14ஆம் தேதி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மோசமான வானிலையால் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வரத் தொடங்கியது.
இருப்பினும் விமானிகள் உடனடியாக விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
அது சுமார் 9 மணி நேரத்திற்குப் பின்னர் வியன்னாவில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முடிவு வரும் வரை விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)