ஜெர்த்தே, 03 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை, திரெங்கானு பெர்ஹெந்தியான் தீவில் மூன்று பயணிகள் பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட படகு ஓட்டுநர், போதைப் பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டை, இன்று பெசூட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
மாஜிஸ்திரேட் நூர்லியானா முஹமட் சுக்ரி முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அஸ்ரி யாசிட் அதனை ஒப்புக் கொண்டார்.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் முதல் அட்டவணையில் பகுதி III dan IV-இல் பட்டியலிடப்பட்ட்டிருக்கும், Nimetazepam வகை போதைப் பொருளை, அஸ்ரி உடலில் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி பெசுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் காலை மணி 10.05 அளவில் அக்குற்றம் செய்யப்பட்டது.
2002-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 15 உட்பிரிவு (1) உட்பிரிவு (a) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது கண்காணிப்பு உத்தரவுடன் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இரண்டாயிரத்து 500 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அஸ்ரியை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)