பேங்காக் , 03 ஜூலை (பெர்னாமா) -- தாய்லாந்து முன்னாள் துணைப் பிரதமர் சூர்யா ஜுங்-ரங்-ருவாங்கிட் இன்று இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார்.
மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பேதோங்தார்ன் ஷினாவத்ரா உட்பட 14 புதிய அமைச்சர்களும், இன்று அந்நாட்டின் அரசர் மஹா வஜிரலோங்கோர்ன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
தாய்லாந்தின் தற்காப்பு முன்னாள் அமைச்சர் 71 வயத பும்தம் தற்போது உள்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பேதோங்தார்ன் கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்போடியா எல்லை பிரச்சினை தொடர்பாக, அந்நாட்டின் அதிபர் Hun Sen உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவு கசிந்ததை தொடர்ந்து, பேதோங்தார்ன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)