Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கனமழை காரணமாக AEROTRAIN சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

04/07/2025 05:54 PM

சிப்பாங், 04 ஜூலை (பெர்னாமா) - கனமழை காரணமாக ரயில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் KLIA-இல் புதிய Aerotrain சேவை இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வடிகால் குழாய்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தண்ணீர் சுயமாகவே வெளியேறாமல் போனதைத் தொடர்ந்து காலை மணி 11 அளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக Malaysia Airports தெரிவித்தது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டு சுரங்கப் பாதை பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்கு முன்னர் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குழுவினரிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர்,
நண்பகல் மணி 12.15 அளவில், Aerotrain சேவை மீண்டும் தொடங்கியது.

இருப்பினும், அந்த காலக்கட்டத்தில் satelit முனையத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து சேவை தடைபடவில்லை என்றும், பேருந்து வழியாக பயணிகள் அனுப்பப்பட்டதாக Malaysia Airports குறிப்பிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)