இஸ்மிர், 03 ஜூலை (பெர்னாமா) -- துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் பெரிய தீயை அணைக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.
விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீயணைப்பு நடவடிக்கைகள் நேற்று வரை நீடித்தன.
பாதுகாப்பு நடவடிக்கையாக மூன்று குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இஸ்மிரில் சுமார் 110 வீடுகள் பெரிதளவில் தேசமடைந்திருப்பதாக பேரிடர் மற்றும் அவசர நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், அதில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)