மேரிலாந்து, 04 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து வெளிநாடுகளுக்கு கடிதங்களை அனுப்பப்படும்.
தனது நிர்வாகம், அப்பணியை இந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
இது முந்தைய உறுதிமொழிகளிலிருந்து தெளிவான மாற்றம் என்றும், இது ஏராளமான தனிப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இதன்வழி, வரி விகிதங்கள் 10-லிருந்து 20 விழுக்காடு முதல் 60-லிருந்து 70 விழுக்காடு வரையில் அதன் மதிப்பில் மாறுபடும் என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் முதலாம் தேதி முதல் அமெரிக்காவிற்குப் பணவரவு தொடங்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)