பாரிஸ், 04 ஜூலை (பெர்னாமா) - தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரான்ஸ் நாட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு Paris சென்றடைந்த அன்வார், இன்று காலையில் தமது சகாவான Francois Bayrou- உடன் சந்திப்பு நடத்தவிருக்கிறார்.
முன்னதாக, Hôtel des Invalides-இல் பிரான்ஸ் அரசாங்கத்தால் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
மலேசியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான நீண்டகால அரச தந்திர உறவுகளின் நெருக்கத்தையும், அனைத்துலக மரியாதையையும் பிரதிபலிக்கும் வகையில் அவருக்கான வரவேற்பு நல்கப்பட்டதாக அன்வார் கூறினார்.
அதிகரித்து வரும் சிக்கலான உலக நிலப்பரப்பை எதிர்கொண்டு, பன்முகத்தன்மையை ஆதரித்து, அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதோடு அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் பிரான்ஸ் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற மலேசியா உறுதிபூண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
அனைத்துலக நன்மைக்காக பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு வட்டார நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் அமைதிக்குப் பங்களிக்கும் வகையில் இரு நாடுகளும் தொடர்ந்து நிலைத்திருப்பதை, அன்வாரின் இப்பயணம் பிரதிபலிக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)