ஸ்பெயின், 04 ஜூலை (பெர்னாமா) -- நேற்று, சாலை விபத்தில் மரணமடைந்த லிவர்பூல் காற்பந்தாட்டக்காரர் டியொகோ ஜோட்டா மற்றும் அவரின் தம்பி ஆண்ட்ரே சில்வாவின் உடல்களை ஏற்றிச் சென்ற வாகனம், ஸ்பெயின், Puebla de Sanabria நகரிலிருந்து அவர்களின் இல்லத்திற்கு புறப்பட்டது.
ஜோட்டாவின் மனைவி ரூத் கார்டோசோ மற்றும் போர்த்துகல் விளையாட்டு நிர்வாகியான ஜார்ஜ் மெண்டீஸ் ஆகியோரும் அங்கிருந்து வெளியேறியதை காண முடிந்தது.
வியாழக்கிழமை அதிகாலை ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் Lamborghini ரகக் காரை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் அக்கார் கவிழ்ந்து தீப்பிடித்ததில் இத்துயரச் சம்பவம் ஏற்பட்டது.
மற்றொரு காரை முந்தி செல்ல முற்பட்டபோது திடீரென அக்காரின் டயர் வெடித்ததால் அது சாலை தடுப்பில் கவிழ்ந்து சாலைத் தடுப்பில் கிடந்தது, சம்பவ இடத்தில் கண்டறிந்த ஆதாரங்கள் காட்டுவதாக போலீசார் கூறினர்.
ரூத் கார்டோசோவை, ஜோட்டா கடந்த மாதம் மணம் புரிந்தார்.
லிவர்பூலில் இருந்த காலக்கட்டம் முழுவதும் 182 ஆட்டங்களில் விளையாடிய ஜோட்டா அந்த கிளப்புக்காக 65 கோல்களை அடித்துள்ளார்.
லிவர்பூல் club கடந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக், EPL-ஐ வெல்வதற்குப் பெரும் பங்காற்றிய ஜோட்டா, 2022-ஆம் ஆண்டு FA கிண்ணத்தையும், அதே ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டில் லீக் கிண்ணத்தையும் பெறுவதற்கு அவரின் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)