லண்டன், 05 ஜூலை (பெர்னாமா) -- விம்பள்டன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று, உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் அரினா சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர், பிரிட்டனின் எம்மா ரடுகானுவுடன் விளையாடினார்.
திறமையான ஆட்டத்தை வழங்கினாலும், எம்மா ரடுகானு 7-6 6-4 என்ற நேரடி செட்களில் தோல்வி கண்டார்.
முதல் செட் மட்டுமே 74 நிமிடங்கள் வரை நீடித்த நிலையில் மொத்த ஆட்டமும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நிறைவுற்றது.
நான்காம் ஆட்டத்தில், சபலென்கா, எலிஸ் மெர்டென்சுடன் மோதவுள்ளார்.
மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில், ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவுடன் விளையாடிய அவர், முதல் செட்டில் 3-6 என்று வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களிலும் 6-4, 6-4 என்ற புள்ளிகளில் ஒசாகா தோல்வி கண்டார்.
ஆடவருக்கான பிரிவில், நடப்பு வெற்றியாளரான கார்லோஸ் அல்கராஸ் நான்காம் சுற்றுக்குத் தேர்வாகினார்.
ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃப்புடன் நடைபெற்ற ஆட்டத்தில், அல்கராஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)