டெக்சஸ், 05 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்கா, தெற்கு மத்திய டெக்சஸ்சில் நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முகாமில் தங்கியிருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகளை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் சிலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகிறது.
பல சாலைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், ஆற்றங்கரைகளில் போடப்பட்டிருக்கும் முகாம்கள் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்தனர்.
குடியிருப்பி பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், அங்கே தங்கியிருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சுமார் 500 மீட்புப் பணியாளர்கள் மற்றும் 14 ஹெலிகாப்டர்கள் திரட்டப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்க கடலோர காவல்படையினரும் இணைந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)