வாஷிங்டன் டி.சி, 05 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்காவின் புதிய வரி சலுகைகள் மற்றும் அந்நாட்டின் செலவுகளை குறைக்கும் மசோதாவைச் சட்டமாக்கும் உத்தரவில், அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார்.
இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சுகாதார காப்பீட்டை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், டிரம்பின் இந்நடவடிக்கைக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
''சேர்த்ததுதான். இது இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. வரலாற்றிலேயே இது மிகப்பெரிய மசோதா. இதுபோன்ற எதையும் நாம் இதற்கு முன்பு சந்தித்ததில்லை'', என்றார் அவர்.
இருப்பினும், தனிநபர் வருமான வரிகள், தொழில் வரிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இதற்கு பல தரப்பினர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
உதாரணத்திற்கு, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் அதற்கு 5 விழுக்காடு வரி விதிக்க முன்மொழிந்திருந்ததை ஒரு விழுக்காட்டிற்குக் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டு அந்நாட்டு மேலவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வரிச் சலுகைகள் மற்றும் செலவு குறைப்புகளின் ஒரு பெரிய தொகுப்பிற்கான சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)