கோலாலம்பூர், 08 ஜூலை (பெர்னாமா) -- இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாட்டிற்குப் புறப்பட்டார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முதலீட்டை ஈர்ப்பதற்கும் மலேசியாவிற்கான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த அதிகாரப்பூர்வ பயணங்கள் வழிவகுத்திருக்கும் நிலையில் அதன் இலக்குகள் எட்டப்பட்டுள்ளன.
ஆசியான் தலைவராக மலேசியாவின் தெரிவுநிலையை அதிகரிப்பதிலும் இந்தப் பயணம் வெற்றி பெற்றுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக சந்தைகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான பரந்த வலையமைப்பையும் இந்த தொடர் பயணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார்.
இத்தாலிக்கு மேற்கொண்ட பயணத்தின் வழி 800 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதோடு பிரான்சுக்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் சுமார் 400 கோடி ரிங்கிட் முதலீட்டு வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் கலந்து கொண்ட அந்நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆற்றிய உரையின் மூலம் மலேசியாவும் கவனத்தைப் பெற்றது.
வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையிலான நீதியின் முக்கியத்துவத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நிர்வாகத்தையும் வலியுறுத்தும் வகையில் பிரதமரின் அமைந்திருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]