Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றது - அன்வார்

09/07/2025 04:45 PM

கே.எல்.சி.சி, 09 ஜூலை (பெர்னாமா) --   உறுப்பு நாடுகளிடையே வலுவான நம்பிக்கை மற்றும் நட்புறவால் இயக்கப்படுவதால், ஆசியான் தற்போது அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உலக அரங்கில் ஆசியானின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டிற்குத் தெளிவான சான்றாக அமையும் ஒவ்வொரு இருதரப்பு சந்திப்பிலும் ஆசியான் பற்றிய விவாதங்கள் இடம்பெறும் என்றும் அன்வார் விவரித்தார்.

கடுமையான விவகாரங்களை ஒன்றாக எதிர்கொள்ளும் தைரியம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான உரையாடல் ஆகியவை அரச தந்திர ரீதியாகவும், அமைதியாகவும் கையாள்வதற்கு, ஆசியானை ஒரு முதிர்ந்த கூட்டமைப்பாக நிறுவியுள்ளதாக, அன்வார் விவரித்தார்.

மாறுப்பட்ட கருத்துகள் இருந்தபோதிலும், ஆசியான் தலைவர்களும் வெளியுறவு அமைச்சர்களும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் வெளிப்படைத் தன்மையையும் கூட்டு ஆதரவுகளையும் காட்டி வருவதாக, அவர் கூறினார்.

"உங்களுக்குத் தெரியும் நான் இப்பொழுதுதான் ரியோவிலிருந்து திரும்பினேன். அது முன்பு இத்தாலி, பிரான்சில் இருந்தது. காரணங்கள் இல்லாமல் தலைவர்களை சந்தித்தல், நிச்சயமாக மலேசியாவுடனான இருதரப்பு அமர்வுகள். ஆனால், காரணங்களின்றி அவர்கள் அனைவரும் ஆசியான் பற்றி கேட்கிறார்கள். ஆசியானின் பங்கை அனைவரும் அங்கீகரித்துள்ளனர். ஆசியான் தற்போது ஒரு அற்புதமான நிலையை அடைந்துள்ளது. அனைத்துலக அளவில் அளவிடப்பட்ட மரியாதை மற்றும் அங்கீகாரம். உங்கள் அனைவருக்கும், குறிப்பாக, வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்'', என்றார் அவர்.

அண்மையில், பிரேசில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புகள் குறித்து கருத்துரைத்த பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, காசா மற்றும் பாலஸ்தீனில் ஏற்பட்டு வரும் மோதல்கள், உக்ரேனின் போர் நிலைமை, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் ஏற்படும் உறுதியற்ற தன்மை மற்றும் மியான்மாரில் நடந்து வரும் நெருக்கடி போன்ற அண்மைய உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும், அவர் கவலை தெரிவித்தார்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அண்மைய இருதரப்பு பிரச்சனைகள் குறித்து பேசிய அன்வார், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை குறைத்து, அமைதியை நிலைக்க செய்யும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் ஆசியான் தொடர்ந்து தீவிர பங்காற்றும் என்று தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)