Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கிளப் உலகக் கிண்ணம்; இறுதி ஆட்டத்தில் செல்சி

09/07/2025 07:58 PM

நியூ ஜெர்சி, 09 ஜூலை (பெர்னாமா) -- கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு செல்சி முன்னேறியது.

அரையிறுதி ஆட்டத்தில் அது பிரேசிலின் Fluminense கிளப்பை 2-0 என்ற நிலையில் தோற்கடித்தது.

நியூ ஜெர்சியின், மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால், வெற்றியை அதற்கு சொந்தமாக்கியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அதன் முதல் கோல் 18-வது நிமிடத்திலும், இரண்டாம் கோல் 56-வது நிமிடத்திலும் அடிக்கப்பட்டன.

செல்சியில் புதிய ஆட்டக்காரராக களமிறங்கி இருக்கும் ஜோய் பெட்ரோ அந்த இரு கோல்களையும் போட்டு ஆட்டநாயகனானர்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் செல்சி, பிரான்சின் PSG அல்லது ஸ்பெயின் ரியல் மாட்ரிட் கிளப்புடன் மோதும்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)