அகமதாபாத், 09 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மாதம், இந்தியா, அகமதாபத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகளின் இயக்கத்தின் மீதான விசாரணையில் கவனம் செலுத்துவதாக, இவ்விவகாரத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதாபத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன், கெட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட Boeing 787-8 Dreamliner ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அருகிலுள்ள மெக்ஹனி எனும் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், விமானத்தின் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததை ஏர் இந்தியா நிறுவனம் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும், தரையில் இருந்த சிலரும் பலியாகினர்.
இந்த விபத்து குறித்த விசாரணை, விமானம் மற்றும் அதன் குரல் தரவு பதிவுகளின் பகுப்பாய்வைத் தொடர்ந்து, விமானத்தின் இறுதி தருணங்களின் நிலைமை, இயந்திர எரிபொருள் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)