கஸ்ஸாப், 13 ஜூலை (பெர்னாமா) -- சிரியாவின் வடமெற்கு பகுதியில் உள்ள கஸ்ஸாப் நகரைச் சுற்றி பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சிகள் பத்தாவது நாளாக தொடர்கின்றது.
தீயைக் கட்டுப்படுத்தவும், அதன் சுற்றுச்சூழலின் சேதத்தைக் குறைக்கவும் சிரியாவின் பாதுகாப்பு படை, அண்டை நாடுகளின் ஆதரவுடன் தீவிர பணியில் ஈடுப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் காட்டுத் தீ பரவுதால், இரு நாடுகளின் தீயணைப்பு படையினரும் அதனை அணைப்பதற்கு தங்களின் எல்லைப் பகுதிகளில் போராடி வருகின்றனர்.
இதனால் பல லட்சம் ஹெக்டேர் காடுகள் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளன.
ஜோர்டான், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் தீயக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
சனிக்கிழமை, கட்டார் உள்துறை அமைச்சின் சிறப்பு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்களும் உதவுதற்கு முன் வந்துள்ளன.
லதாகியாவின் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சிரிய விமானப்படை ஹெலிகாபடர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
கோடைகாலத்தில் தீ விபத்துகள் ஏற்படுவது பொதுவானது, இந்த பருவநிலை மாற்றம் நிலைமைகளை இன்னும் மோசமாக்குவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)