அரகோன், 13 ஜூலை (பெர்னாமா) -- ஸ்பெயின், கட்டலோனியா கடற்கரை அரகோனில் உள்ள சில பகுதிகள் உட்பட வெலன்சியாவின் காஸ்டெல்லோனில் கனத்த மழையுடன் கூடிய புயல் காற்று வீசும் என்று எச்சரிக்கை நேற்றும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்றும் மற்றும் மின்னல் காரணமாகப் பயணங்களைத் தவிர்க்குமாறு, கட்டலோனியாவின் வானிலை ஆய்வு நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
கனமழையின் காரணமாக, கட்டலோனியா மற்றும் காஸ்டெல்லோனில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை, தீயணைப்பு வீரர்கள் வெளியிட்ட காணொளியில் காண முடிந்தது.
அந்நாட்டின் எட்டு மாகாணங்களில் திடீர் வெள்ளம் அபாயம் அதிகம் இருப்பதாக ஸ்பெயின் வானிலை நிறுவனம் எச்சரித்திருந்தது.
கட்டலோனியாவில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வட்டார ரயில் சேவைகள் பல மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சூழ்நிலையைக் கையாள, அவ்விரு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தங்கள் பணிகளை மேற்கொள்வதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)