தியான்ஜின், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- உலகப் பொருளாதாரத்தின் அடுத்தக் கட்டத்தில் ஆசிய நாடுகள் தங்கள் சொந்த அத்தியாயத்தை மாற்றியமைத்து முன்னிலை வகிக்க வேண்டும்.
அதே வேளையில், எதிர்காலத்திற்கான அடுத்தக் கட்டத்தை வடிவமைக்கவும் வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த அத்தியாயம் ஆசியானால் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை அந்நாடுகள் ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், நெருக்குதல்கலை சந்திக்கும் தற்போதைய உலகப் பொருளாதாரம், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தடைகள், பிளவுக்கான தொடக்கமாக அல்லாமல், ஒற்றுமைக்கான முன்னோட்டமாக மாறுவதை உறுதி செய்வதே ஆசியானின் பணியாகும் என்றும் அவர் கூறினார்.
இன்று, திங்கட்கிழமை தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொதுச் சொற்பொழிவில் அவர் அவ்வாறு கூறினார்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து உலகப் பொருளாதாரம் மூன்று முறை மறுசீரமைக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)