காசா, 14 ஜூலை (பெர்னாமா) -- காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 43 பாலஸ்தீனர்கள் பலியானதாக காசா பொது பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முட்டுக்கட்டையான நிலையில் இச்சம்பவம நிகழ்ந்துள்ளது.
கடந்த 21 மாதங்களாக நீடித்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியப்படுகிறது.
ஒரு தீர்வுகாக அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதல் விரைவில் முடிவடைவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]