Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் பலி

14/07/2025 07:45 PM

சிரம்பான், 14 ஜூலை (பெர்னாமா) --   இன்று மதியம், நெகிரி செம்பிலான், சிரம்பானில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கி செல்லும் 266.9-ஆவது கிலோமீட்டரில் லாரி மற்றும் கார் ஒன்றை உட்படுத்திய சாலை விபத்தில், லாரி ஓட்டுநர் பறிதாபமாக உயிரிழந்தார்.

எனினும், காரில் பயணித்தவர்களுக்கு கைகால் முறிவு ஏற்பட்டதாக, சிரம்பான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவுக்கான மூத்த அதிகாரி நிஜாம் யோம் கூறினார் 

சாலை விபத்து குறித்து மதியம் 12.51 மணிக்கு, தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.

புரோடுவா அத்திவா ரக கார் மற்றும் 1 டன் லாரியை உட்படுத்திய அச்சாலை விபத்தில் 40 வயதுடைய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, நிஜாம் யோம் தெரிவித்தார். 

இதனிடையே புரோடுவா அத்திவா ரக கார்  ஓட்டுநர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பிய நிலையில், முன் இருக்கையில் அமிர்ந்திருந்த பெண் ஒருவருக்கு கால் முறிவும், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கை முறிவும் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)