ரோட்டோருவா, 16 ஜூலை (பெர்னாமா) -- நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் மயோரி சமூகத்தை மேம்படுத்தும் மாதிரியை அடிப்படையாக கொண்டு, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபரிசீலனை செய்யப்படாமல் இருக்கும் 1954-ஆம் ஆண்டு பூர்வக்குடி சட்டம், சட்டம் 134 தற்போது திருத்தம் செய்யப்படவுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நில உரிமைகள், கல்விக்கான அணுகல் மற்றும் பழங்குடி சமூக தொழில்முனைவோரை ஆதரிக்க ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தை நிறுவுதல் ஆகியவை மலேசியாவில் அமல்படுத்த கூடிய சில முக்கிய கூறுகளில் பரிசீலிக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
நியூசிலாந்திற்கு மேற்கொண்ட ஐந்து நாள்கள் அலுவல் பயணத்தின் மூலம், நில உரிமை மட்டுமில்லாமல், கல்வி, வணிகம் மற்றும் நிதியுதவி உட்பட இச்சட்டம் தொடர்பாக பல முக்கிய விவகாரங்களை அறிந்து கொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், நியூசிலாந்து அணுகுமுறையை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என்றும், மலேசியாவில் உள்ள பூர்வக்குடி சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப அது மாற்றி அமைக்கப்படும் என்று டாக்டர் அஹ்மட் சாஹிட் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)