கோபால்கஞ், ஜூலை 17 (பெர்னாமா) -- வங்காள தேசத்தின் கோபால்கஞ் நகரில், இளைஞர்கள் நடத்திய பேரணி, கலவரத்தில் முடிந்தது.
வங்காளதேச இளைஞர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி நடத்திய அப்பேரணியில் வன்முறை தாக்குதல்கள் மோசமடைந்து, நால்வர் உயிரிழந்த வேளையில் பலர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களில், ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளுக்கு பின்னர், வாங்காள தேசத்தின் நீண்ட கால பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் சூழலை உருவாக்கின.
அதன் பிறகு வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள், அதிகரிக்கும் போராட்டங்கள் மற்றும் அரசியல் பிளவுகள் என்று அந்நாட்டில் பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நேற்று நடைபெற்றத அமைதி பேரணியின்போது கட்சி உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டதோடு வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
அதனை, வங்காளதேச அரசாங்கத்தின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் முஹ்மட் யூனோஸ், தமது X பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நால்வர் அதில் பலியானதாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது,
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)