ஜோகூர் பாரு, 18 ஜூலை (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை, ஜோகூர் பாரு ஜாலான் அப்துல் சாமாட்டில் பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 10 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து காலை மணி 7 அளவில் நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தற்போது SULTANAH AMINAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜோகூர் மாநில தகவல் மற்றும் கல்வி செயற்குழுவின் தலைவர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.
முஹமாட் காலிட் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், அமிநுடின் பாக்கி தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், மற்றும் ஜாலான் யஹ்யா ஆவால் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் விபத்துக்குள்ளான வேனில் பயணித்ததாக அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கும் கைகள் உடைந்து சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த சிகிச்சை மற்றும் சுகாதார கண்காணிப்பு வழங்கப்படும் என்று அஸ்னான் தாமின் உறுதியளித்தார்.
விபத்துக்கான காரணத்தை அடையாளம் காண அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விபத்து குறித்து புகார் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)