Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

இணையத்தில் விற்கப்படும் இந்தோனேசியாவின் தீவுகள்

14/07/2025 06:14 PM

ஜகார்த்தா, 14 ஜூலை (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் உள்ள சிறிய தீவுகளை இணையம் வழி விற்பனை செய்யும் நடவடிக்கை அந்நாட்டு மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையைத் தூண்டியுள்ளது.

அனம்பாஸ், பங்கா பெலிதுங் மற்றும் நுசா தெங்காரா (Anambas Islands, Bangka Belitung & Nusa Tenggara) உள்ளிட்ட பல தீவுகள் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

'privateIslandsonline.com' எனும் அகப்பக்கத்தில் அந்த தீவுகள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நடவடிக்கை நாட்டின் இறையாண்மை, நில உரிமைகள் மற்றும் கடலோரங்கள் வசிப்பவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கேள்வி எழுப்பியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

அனம்பாஸ் தீவுகளைச் சுற்றியுள்ள ரிந்தான், மாலா, தொகோங்சென்டோக் மற்றும் நாகோப் ஆகிய நான்கு சிறு தீவுகள் விற்பனைக்கான பட்டியலில் உள்ளன.

தீவு நிர்வகிப்பு அமைப்பையும், கடல் மற்றும் நிலப்பரப்பு வளங்களை நீண்ட காலமாக நம்பியிருந்த மீனவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கான அணுகலையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் மதங்களுக்கான அமைச்சர் நசாருடின் உமார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)