புத்ராஜெயா, 26 ஜூலை (பெர்னாமா) -- புலாவ் பத்து புத்தே இறையாண்மை தொடர்பான பிரச்சனையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற அரசாங்கத்தின் முடிவு தேசிய சட்டத்துறை தலலைவர் முடிவுக்கு அப்பாற்பட்டது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த விவகரம் தொடர்பில் அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் முன் வைத்த பரிந்துரைக்குப் பதிலாக ஒரு முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.
''எனவே அவர் மீது குற்றம் சாட்டும் முடிவு எட்டப்படவில்லை. ஏனெனில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. போலீஸ் விசாரணை. முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு பணிக்குழுவின் விசாரணை தெளிவாக முன்மொழியப்பட்டு கடுமையான குற்றங்களை நிறுவியது,'' என்றார் அவர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]