Ad Banner
Ad Banner
 உலகம்

ஆறு மாதங்களில் மியன்மாரின் பொதுத் தேர்தல் நடத்தப்படும்

01/08/2025 05:38 PM

நய்பிடாவ், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --   பாதுகாப்பு காரணங்களுக்காக மியன்மாரின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதங்களில் நடத்தப்படும் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரை வழிநடத்தும் இராணுவபடை தளபதியான மின் ஆங் ஹ்லைங், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கான கூட்டத்தில் தேர்தல் குறித்து அறிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கடைசியாக தேர்தல் நடந்தது.

இதில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அவர் மோசடி செய்து வெற்றிப் பெற்றதாக ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டு அந்நாட்டு இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வருவம் வேளையில், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர், மக்களிடையே எழுந்த கிளைர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு இராணுவம் பெரும் அட்டூழியங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தற்போது, மியன்மார் அதன் பொதுத்தேர்தலை நடத்தத் திட்டமிடுவது அனைத்துலக அளவில் கேள்விகளையும் அக்கறைகளையும் எழுப்பியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)