ஃபுளோரிடா, 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இண்டர் மயாமியும் நெக்காசாவும் விளையாடின.
இவ்வாட்டத்தில், இண்டர் மயாமியின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி காயம் காரணமாக 11-வது நிமிடத்தில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டம் தொடங்கியதில் இருந்தே மெஸ்சி சிரமத்தை எதிர்நோக்கி வந்தார்.
பின்னர், உடை மாற்றும் அறைக்குத் திரும்பிய அவர் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.
2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி மயாமி அணிக்கு விளையாடி வரும் 38 வயதான மெஸ்சி, ஆரோக்கியமான அடைவு நிலையை பதிவு செய்து வந்தார்.
இவ்விரு அணிகளுக்கான ஆட்டம் 2-2 என்ற கோல்களில் நிறைவுற்றதால் வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் 5-4 என்ற எண்ணிக்கையில் இண்டர் மயாமி வெற்றி பெற்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]