ஜோகூர் பாரு, 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கம்போடியா மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான, பொது எல்லை செயற்குழு, ஜி.பி.சி கூட்டத்தை ஏற்று நடத்துவதற்கான மலேசியாவின் தயார்நிலை குறித்து தெரிவிக்க தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், அவ்விரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களைத் தொடர்பு கொள்ளவிருக்கிறார்.
அவ்விரு தற்காப்பு அமைச்சர்களுடனும், 'Zoom; செயலி வழியாக முத்தரப்பு காணொளி கூட்டத்தை நடத்துவதற்கு முன்னதாக, தொடக்கக்கட்ட நடவடிக்கையாக இந்த தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
''அந்த எல்லைக் கூட்டத்தை வழிநடத்தும் மலேசியாவின் தயார்நிலை குறித்துத் தெரிவிக்க கம்போடியத் தற்காப்பு அமைச்சருக்கும் தாய்லாந்து தற்காப்பு அமைச்சருக்கும் நான் தொலைபேசி அழைப்பு செய்யவுள்ளேன். அதன் பிறகு, அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் செயல்முறை மற்றும் செயல்பாட்டை விளக்க அவர்களுடன் இணையம் வழியாக ஒரு சந்திப்பை நடத்துவேன்,'' என்றார் அவர்.
இன்று, பாசிர் கூடாங் தொகுதிக்கான அம்னோ பிரதிநிதிகள் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் காலிட் நோர்டின் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)