மொண்ட்ரீயால், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- WTA மொண்ட்ரீயால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி.
உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள போலாந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ஆகிய இருவரும் வெற்றிகரமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று கனடா, மொண்ட்ரீயாலில் நடைபெற்ற ஆட்டத்தில், இகா ஸ்வியாடெக் ஜெர்மனியின் ஈவா லைஸ்சைச் சந்தித்தார்.
அதில், 6-2, 6-2 என்று ஸ்வியாடெக் நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.
அதேபோல, அமண்டா அனிசிமோவாவும், பிரிட்டனின் எம்மா ராடுகானுவை 6-2, 6-1 என்று நேரடி செட்களில் தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் 64 நிமிடங்கள் நீடித்தது.
மற்றுமொரு ஆட்டத்தில், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா, 6-1, 6-1 என்று ரஷ்யாவின் அண்ணா கலின்ஸ்கயாவை மிக எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தார்.
55 நிமிடங்களில் வரை இவ்வாட்டம் நீடித்தது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)