Ad Banner
Ad Banner
 உலகம்

பிரயாக்ராஜில் மோசமான வெள்ளம்; நெருக்கடியில் ஆயிரக்கணக்கான மக்கள் 

03/08/2025 04:59 PM

பிரயாக்ராஜ், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உத்தரபிரதேசத்தின் வட இந்திய நகரமான பிரயாக்ராஜில் மோசமான வெள்ளத்தினால் சுமார் 15,000 வீடுகள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் அதிகரித்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தினால் மின்சாரத் தடை ஏற்பட்டதோடு சுத்தமான நீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர் மழையினால், கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வீடுகளையும் தெருக்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தது.

நூற்றுக்கணக்கான சொத்துக்கள் ஓரளவு நீரில் மூழ்கிய வேளையில் எண்ணற்ற குடியிருப்பாளர்கள் உயரமான பகுதிகளைத் தேடி தஞ்சம் புகும் நிலைக்குத் தள்ளப்படுவது பேரழிவுக்கான தாக்கத்தைக் காட்டுகிறது.

பெரும்பாலானோர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]