கோத்தா கினாபாலு, 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலில், நம்பிக்கை கூட்டணி, பி.எச், தேசிய முன்னணி, BN மற்றும் சபா மக்கள் கூட்டணி, ஜி.ஆர்.எஸ் ஆகியவற்றுக்கிடையே மும்முனை போட்டி நிலவுவதை தவிர்ப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அம்மூன்று கூட்டணிகளின் வேட்பாளர்கள் ஒரே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காக தற்போது பேச்சுகள் நடைபெற்று வருவதாக நம்பிக்கை கூட்டணி தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.
''ஆனால் அது நடக்க வேண்டியிருந்தால், எங்கள் ஆலோசனை என்னவென்றால், இந்தப் போட்டியில் இவ்வளவு வேறுபாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க நாங்கள் முயற்சிப்போம். ஆனால், முழுமையான புரிதல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் விரும்புவதால், அதை முன்கூட்டியே தடுக்க விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கோத்தா கினபாலுவில் சபா மாநில கெஅடிலான் கட்சி தலைவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் அவ்வாறு குறிப்பிட்டார்.
பி.எச், BN மற்றும் ஜி.ஆர்.எஸ் இடையேயான புரிதல் முக்கியமானது என்றும் வாக்காளர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்க அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]