ரவாங், 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உடல் நலப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள பெரிதா ஹராகா இணைய நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியர் முஹமட் அசாமின் முஹமட் அமினுக்கு Tabung Kasih@HAWANA உதவி வழங்கப்பட்டது.
முஹமட் அசாமின் இல்லத்திற்கு வருகைப் புரிந்த தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், Tabung Kasih@HAWANA மூலம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு மடிக்கணினியை வழங்கினார்.
கோலா குபு பாருவின் சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ்வின் நன்கொடையில், முஹமட் அசாமின், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு மூன்று ஜோடி புதிய மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும், அந்த முன்னாள் உதவி செய்தி ஆசிரியரின் உடல் நிலையைப் பாதுகாக்க தொடர்ச்சியான இன்சுலின் சிகிச்சை தேவைப்படுவதாக, அவர் கூறினார்.
குடும்பத்தைத் தொடர்ந்து வழிநடத்த உதவும் வகையில், அசாமினுக்கு சொக்சோ உதவி வழங்க தாம் முயற்சி செய்யவிருப்பதாகவும் தியோ தெரிவித்தார்.
"நான் பெர்கேசோவைத் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகின்றேன். இது உண்மையா, பெர்கேசோ எவ்வாறு அசாமினுக்கு உதவ முடியும். பணி நீக்கம் செய்யப்பட்டாலும், பெர்கேசோ பெற தகுதியற்றவன் என்பது இதுவே முதல்முறையாகும். பாதுகாப்பிற்கு பெர்கேசோ காப்புறுதி மிகவும் முக்கியம்,'' என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் 12 ஆண்டுகளாக, ஹராகா நாளிதழ் உட்பட வர்தா மற்றும் சிலாங்கூர் கினி என சுமார் 20 ஆண்டுகளாக பத்திரிக்கை உலகில் முஹமட் அசாமின் பணியாற்றியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)