Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஷம்சுல் ஹரிஸ் மரணம்; விசாரணையின் முழு பொறுப்பை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது

27/08/2025 04:53 PM

ஜோகூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், யு.டி.எம்-இன் PALAPES பயிற்சியாளர் ஷம்சுல் ஷம்சுடினின் மரணம் தொடர்பான விசாரணையை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, யு.எஸ்.ஜெ.டி ஏற்றுக் கொண்டுள்ளது.

மறைந்த ஷம்சுல் ஹரிசின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்ய, நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ எம். குமார் கூறினார்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முழுமையாக உறுதிப்பூண்டுள்ளதோடு, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சட்டத்தின் அடிப்படையில் விசாரணை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் உறுதி செய்யும் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்.குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

சிலாங்கூர், கம்போங் ரின்சிங் உலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் உள்ள கல்லறையில் இருந்து ஷம்சுல் ஹரிசின் சடலத்தை, இரண்டாவது பிரேத பரிசோதனை செய்வதற்காக தோண்டி எடுக்க, நீதிபதி டத்தோ ஶ்ரீ டாக்டர் பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீத் உத்தரவிட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஷம்சுல் ஹரிசின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட 14 நாட்களுக்குள், கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்,  மற்றும் அம்மாணவனின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் அல்லது நரன் சிங் & கோ சட்ட நிறுவனத்தின் பிரதிநிதி முன்னிலையில் மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜோகூர், உலு திராமில் உள்ள இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த 22 வயதான ஷம்சுல் ஹரிஸ், ​​ஜூலை 28-ஆம் தேதி கோத்தா திங்கி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்படுவதுடன், அதன் நகலை வழக்கறிஞர் நரன் சிங் அல்லது நரன் சிங் & கோ சட்ட நிறுவனத்திடம் சமர்பிக்கும்படி, தடயவியல் நிபுணருக்கு உத்தரவிடப்பட்ட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)