சுபாங் ஜெயா, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- திங்கள் முதல் மூன்று நாள்கள், மலேசியாவிற்கு மேற்கொண்ட தேசிய பயணத்தை முடித்துக் கொண்டு, புரூணை சுல்தான் சுல்தான் ஹசனல் போல்கியா, இன்று நாடு திரும்பினார்.
சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் பெஙிரான் மூடா அப்துல் மாட்டீன் போல்கியா, அமைச்சர்கள், புரூணையின் மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய பேராளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், சுபாங் அரச மலேசிய ஆகாயப்படை விமான தளத்தில் இருந்து மாலை மணி 3.05-க்கு புறப்பட்டது.
துங்கு தெமெங்கோங் ஜோகூர், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் சுல்தான் ஹசனல் போல்கியாவை வழியனுப்பி வைத்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)