புத்ராஜெயா, 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சந்தையில் கோழி முட்டைகளின் விநியோகம் போதுமானதாகவும் நிலையானதாகவும் உள்ளது.
மேலும் உள்ளூர் கோழி முட்டைகளின் உற்பத்தி தற்போது உள்நாட்டு தேவையை விட அதிகமாக உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி முட்டைகளுக்கான உதவித் தொகை மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கால்நடை சேவை துறை, டி.வி.எஸ் வழங்கிய தரவுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய உற்பத்தித் தரவுகளின் அடிப்படையில் சந்தை விலையை டி.வி.எஸ் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
திறந்த சந்தைக்கு வழிவிடும் வகையில் உதவித் தொகை மறுசீரமைப்பு மேற்கொள்ளட்டதாகவும், அந்நடவடிக்கையினால் பயனீட்டாளர்களுக்கான முட்டை விநியோகம் பாதிக்காது என்று அமைச்சு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
A, B மற்றும் C தரத்திலான முட்டை விநியோகம் இன்னும் நிலையாக இருப்பதாகவும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கூறியிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)