ஜாலான் பார்லிமன், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கோடிக் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பொது நிதிக் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் வழக்கமான திட்டங்களை வழங்கும் நடைமுறையை மடானி அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அரசு கொள்முதல் விஷயங்களில் நிர்வாக நிலையை அதிகரிக்க, அரசாங்கம் தொடர்ந்து நடப்பில் உள்ள விதிமுறைகளை மேம்படுத்தி புதுப்பித்து வருவதாக துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.
''எனவே, அரசாங்க ஒப்பந்தங்களில் கசிவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொது குத்தகைகளின் வழி கொள்முதலை அமல்படுத்துவதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து மடானி அரசாங்கம் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் சாதாரண திட்டங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்தியுள்ளது'', என்றார் அவர்.
இன்று மக்களவையில், கோடிக் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பொது நிதி இழப்புகளை உட்படுத்திய கசிவுகளைக் கையாள்வதற்கான மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிமின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)