BREAKING NEWS   Earthquake: 15 government buildings in Segamat suffered minor damage, estimated repair cost is RM550,550 - Ahmad Maslan | 
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

2025 அரசாங்க கொள்முதல் சட்ட மசோதா நிதி அமைச்சரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும்

28/08/2025 05:31 PM

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) - 2025ஆம் ஆண்டு அரசாங்கக் கொள்முதல் சட்ட மசோதா அதிகாரத்தை சற்றும் அதிகரிக்கவில்லை.

மாறாக, வலுவான சரிபார்ப்பு மற்றும் சமநிலை வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் வழி, நிதி அமைச்சரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

கொள்முதல் விவகாரங்களில், நிதியமைச்சரின் அதிகாரம், 1957-ஆம் ஆண்டு நிதி நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 6(1)-இன் கீழ் இடம்பெற்றுள்ளது.

இது அரசாங்க கொள்முதல் தொடர்பான கொள்கை, ஒப்புதல் மற்றும் விலக்கு மீது விரிவான அதிகாரத்தை வழங்குவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

"பிகே சட்ட மசோதாவின் கீழ், கொள்முதல் நிர்வகிப்பில் நிதி அமைச்சரின் கடமை மற்றும் அதிகாரச் சட்டத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலையைப் போல் அல்லாமல், நிதி அமைச்சரின் முடிவுகளை தற்போது மறுஆய்வு குழு செயல்முறை மூலமாகவும், அதைத் தொடர்ந்து பாரபட்சமற்ற கொள்முதல் மேல்முறையீட்டு நடுவர் மன்றம் மூலமாகவும் சவால் செய்து மறுஆய்வு செய்யலாம்," என்றார் அவர்.

மக்களவையில் இன்று 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கொள்கை அளவிலான 2025-ஆம் ஆண்டு அரசாங்கக் கொள்முதல் சட்ட மசோதாவின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போது டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா இவ்வாறு கூறினார்.

இச்சட்ட மசோதா எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக தண்டனை நடவடிக்கையையும் அறிமுகப்படுத்துவதோடு, நிதியமைச்சர் தமது நலன்களை தெரிவிக்கத் தவறினாலோ அல்லது கொள்முதல் செயல்முறையில் தலையிட்டாலோ அவர் தமது பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டார் என்றும் அமீர் ஹம்சா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)