ஹாங்காங், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- தாப்பா எனும் வெப்பமண்டல புயல் ஹாங்காங்கை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அந்நாட்டின் பள்ளிகள் மற்றும் வணிக தலங்கள் இன்று மூடப்பட்டன.
மேலும் விமான பயணங்களும் இரத்து செய்யப்பட்டன.
படகுகள், பேருந்துகள் மற்றும் உட்பட பெரும்பாலான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் இப்புயல் வீசக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால், ஹாங்காங் முழுவதும் இன்று கனமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியது.
இருப்பினும், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி காலை மணி 8:50-க்கு, சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தை தாப்பா வெப்பமண்டல புயல் கடந்தது,
அதனை தொடர்ந்து, அப்புயல் ஹாங்காங்கிலிருந்து விலகிச் செல்லும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)