கீவ், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- நேற்று உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.
உக்ரேன் மீதான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இத்தாக்குதலில் கீவ்வில் உள்ள அரசாங்கக் கட்டிடத்தின் சிலப் பகுதிகள் தீக்கிரையாகின.
நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிபர் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவுக்கு உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முயன்று வரும் வேளையில், ரஷ்யா இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதனால், இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக இரண்டாம் கட்ட தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம் நேற்று கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)