செர்டாங், 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி 4.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிச்சயமற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களில், மையத்தன்மை கொள்கையை அரசாங்கம் அணுகியதன் விளைவு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதோடு, அடக்குமுறை வரிகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வகையில், ஆசியான் நாடுகளிலும் அதே மையத்தன்மை அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
''மையத்தன்மை கொள்கையை ஆசியானிலும் பயன்படுத்துவோம். சீனாவுடன் நட்பு கொள்வது, அமெரிக்காவுடன் நட்பு கொள்வது போன்ற அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாளை, தேசிய தின அணிவகுப்புக்குப் பிறகு, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் நான் சீனாவுக்குச் செல்கிறேன்,'' என்றார் அவர்.
இதனிடையே, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் திறன், மலேசியா ஒரு வளர்ச்சி அடையும் நாடு என்பதை நிரூபித்துள்ளதாக அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)