Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அடிப்படை பொருட்கள் போதுமான கையிருப்பில் உள்ளது - அரசாங்கம் உத்தரவாதம்

03/09/2025 05:53 PM

புத்ராஜெயா, 03 செப்டம்பர் (பெர்னாமா) --   நாட்டிலுள்ள ஒவ்வோர் இரண்டு கோடியே 20 லட்சம் பேருக்கு, ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாராவின் கீழ் 100 ரிங்கிட் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும், கோழி, முட்டை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பொருட்களுக்கும் போதுமான கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது.

சந்தையில் விநியோகம் நிலையானதாகவும், பயனீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இருப்பதை உறுதி செய்வது தொடர்பில் கண்காணிப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோ ஃபஹ்மி, விநியோகப் பற்றாக்குறை குறித்து எந்தவொரு புகாரையும், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என், இதுவரை பெறவில்லை என்றும் கூறினார்.

''மேலும் அடிப்படைத் தேவைகளின் இருப்பு அல்லது விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிசெய்ய கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இன்றைய கூட்டத்தில், தொடர்புடைய பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் எதுவும் எழுப்பப்படவில்லை. ஆனால் கே.பி.டி.என் மற்றும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கோழி, முட்டை உள்ளிட்ட இதர அடைப்படைப் பொருட்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்யும்'', என்றார் அவர்.

சில சில்லறை விற்பனை மையங்கள், இன ரீதியின் அடிப்படையில், நடந்து கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில் என்றும் ஃபஹ்மி தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)