பாகான் டத்தோ, 07 செப்டம்பர் (பெர்னாமா) - பகடிவதை எதிர்ப்பு நடுவர் மன்ற சட்ட மசோதாவிற்கான ஆய்வறிக்கையை, அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு, சட்ட மற்றும் கழக சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட்டிற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இவ்விவகாரம் சட்டம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அசாலினா ஒரு கலந்தாலோசிப்பை நடத்திய பின்னர இந்த ஆய்வறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தங்கும் வசதி கொண்ட பள்ளிகள், மாரா அறிவியல் கல்லூரிகள், அரச இராணுவ கல்லூரி போன்ற உயர்நிலைப் பள்ளிகள், பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உட்பட நாடு தழுவிய அளவிலான பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இச்செயல்முறையில் இணைய வேண்டும் என்று அமைச்சரவை பரிந்துரைத்ததாக புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் கூறினார்.
"பகடிவதை தொடர்ந்து நிகழாமல் தடுக்கவும், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் அது குறித்து தொடர்ந்து சிந்திக்காமல் தடுக்கவும் இச்சட்ட மசோதா அவசியமாகிறது," என்றார் அவர்.
இன்று, பேராக் பாகான் டத்தோவில், Bakti MADANI@KPT மற்றும் புறநகர் ஊக்குவிப்பு திட்டமான, MODE@KEMAS KKDW நிகழ்ச்சிகளை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)